Tamil Film Producers Council: முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்ட்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் (Tamil Film Producers Council) செயற்குழு கூட்டத்தில் நான்கு நடிகர்களுக்கு ரெட் கார்ட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல், நஷ்டம் ஏற்படுத்திய சில நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்கத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டது.

மேலும் இந்த லிஸ்டில், தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, அமலா பால், வடிவேலு, ஊர்வசி, சோனியா அகர்வால், அதர்வா உள்ளிட்ட 14 நடித்தார்கள் உள்ளதாகக் கூறப்பட்டது.இந்தநிலையில் நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வாவுக்கு எதிராக ரெட் கார்டு வழங்கத் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு மீது ஏற்கெனவே பல முறை புகார்கள் எழுந்து பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பணத்தை முறையாகக் கையாளததால் விஷாலுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *