கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும் எம்.ஜி.எம் மருத்துவமனை புதிய அறிக்கை அதிரடியாக வெளியிட்டுள்ளது. பரப்பான செய்தியை சற்று விளக்கி கூறுகிறேன் கேளுங்கள்.
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையே தோற்கடித்து அவருக்கு ஆப்பு அடித்தார். சட்டமன்றத்திற்கு வரும்போதெல்லாம், ஸ்டாலினை வெறுப்பு ஏத்தும் விதாமாக சைகையெல்லாம் காட்டி ஸ்டாலினை காண்டேத்தினார்.
இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி அதிகாலையில் வீட்டில் இருந்த போது தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அலறியடித்தபடி உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இங்குதான் ஒரு கேள்வி மக்கள் முன்வைத்தார்கள். ஏன் மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தால் உயிர் பிழைக்க மாட்டார்களோ பாபு. இப்படியெல்லாம் மக்கள் அவர்மீது காட்டத்தை கொட்டித்தீர்த்து வருகையில் அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஎஸ் பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 9 நாட்களாகியுள்ள நிலையில் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் எம்.எல்.ஏ வி.எஸ். பாபுவின் உடல் நிலை குறித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இன்றும் எம்.எல்.ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு, சுவாசக் கோளாறு காரணமாக கடந்த 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் சென்னையைச் சேர்ந்த எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவின் தீவிர கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் அவர் தொடர்ந்து இருந்து வருகிறார். அவரது உடல்நலக் குறியீடுகளில் முன்னேற்றம் காணப்படுவதுடன், அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக இடைத்தேர்தல் மீண்டும் வராது என்பது இதன் மூலம் ஓரளவுக்கு தெளிவாகிறது. ஆண்டவன் போடும் கணக்கால் பாபு உயிர்பிழைத்து புரண நலத்தோடு சட்டமன்றத்தில் நீட்டிப்பாரா அல்லது போதும் பாவு என்று சொல்லவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


