மகா கும்பமேளாவில் புனித நீராடிய தமன்னா!

நடிகை தமன்னா, அசோக் தேஜா இயக்கத்தில் உருவாகும் ‘ஓடேலா-2’ என்ற திரைப்படத்தில் பெண் துறவியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் டீசர், உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெறும் மகா கும்பமேளா விழாவில் வெளியிடப்பட்டது. விழாவில் தமன்னா தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் பின்னர், தமன்னா தனது குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, தொடர்ந்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டார்.

தமன்னா சமீபத்திய காலங்களில் ஆன்மிகத்தில் அதிக ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *