
சென்னையில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து உணவுப் பொருள் அனுப்பி வைக்கப்பட்டது.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. 40 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை கொட்டித்தீர்த்தது. இதனால் தலைநகர் ஸ்தம்பித்து போனது. பெரும்பாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி, பள்ளிக்கரணை, வட சென்னை என பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியது. மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வந்தனர்.

அரசு தர்ப்பில் அனைத்து நிவாரணப் பணிகள் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆனாலும் ஒரு சில பகுதிகளில் இன்னும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், புயல் மழையினால் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்ட மக்கள் கனமழையால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவித்து வரும் நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூரில் சமூக ஆர்வலர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட உணவு பொருளை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து டாட்டா ஏசி வாகனத்தின் மூலம் அலுவலக ஊழியர்கள் வட்டாட்சியர் சையத் அபுதாகிர் முன்னிலையில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது சமூக நலத்துறை வட்டாட்சியர் முருகன் வருவாய் ஆய்வாளர் மாலா மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.



