மாலி’ என்று செல்லப்பெயரால் அழைக்கப்பட்ட புல்லாங்குழல் கலைஞர் டி. ஆர். மகாலிங்கம் பிறந்த நாள் இன்று.
தமிழ்நாட்டைச் சேர்ந்த புல்லாங்குழல் இசைக் கலைஞர் ஆவார். தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூரில் நவம்பர் 6 1926 ஆம் ஆண்டு அன்று டி. ஆர். மகாலிங்கம் பிறந்தார். இவருடைய பெற்றோர் ராமசாமி ஐயர், பிரகதாம்பாள். இவர் தனது தாய் மாமா ஜாலரா கோபால ஐயரிடம் இசை பாடுதலை கற்கத் தொடங்கினார். தனது ஐந்து வயது முதல் புல்லாங்குழல் வாசித்தலை சிறுவருக்குரிய ஒரு விளையாட்டுத்தனத்துடன் ஆரம்பித்தார். நாளடைவில் காதால் கேட்கும் எப்பாடலையும் புல்லாங்குழலில் வாசிக்கும் திறனுடன் விளங்கினார்.
டி. ஆர். மகாலிங்கம் தனது 7 வயதில், முதல் இசை நிகழ்ச்சியினை நிகழ்த்தினார். மயிலாப்பூரில் நடந்த தியாகராஜா இசைத் திருவிழாவில் 1933 ஆம் ஆண்டு இடம்பெற்றது. அவரின் தந்தையார், ஏராளமான நிகழ்ச்சிகளில் டி. ஆர். மகாலிங்கம் கலந்து கொள்ள பல முயற்சிகளை செய்தார்.
புகழ் வாய்ந்த பக்க வாத்தியக் கலைஞர்கள் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, உமையாள்புரம் கோதண்டராம ஐயர், உட்பட பலரின் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார். புல்லாங்குழல் வாசிப்பில் புதிய தொழில்நுட்ப திறன்களை அறிமுகப்படுத்தினார் டி. ஆர். மகாலிங்கம். ஒன்றிணைந்த, விட்டு விட்டு வாசிக்கக்கூடிய இசைக்கருவியாக இருந்து வந்த புல்லாங்குழல், வாய்ப்பாட்டு போன்று மாறியது. வாய்ப்பாட்டு நுணுக்கங்கள் அனைத்தையும் புல்லாங்குழலில் வெளிப்படுத்தினார் அவர்.
1955 -ல் பெங்களுரு சென்ற அவர் புல்லாங்குழலில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தினார். 1980 முதல் 1985 வரை அமெரிக்காவில் வாழ்ந்தார். அப்போது அங்கு நிறைய இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். இந்தியா திரும்பிய பிறகு 1986- ஆம் ஆண்டு 60 வயதில் காலமானார். 1986 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது இந்திய அரசு வழங்கியது.