
பொதுத்தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கும் விழாவில் வருகின்ற தேர்வு எனக் கூறுவதற்கு பதிலாக வருகின்ற தேர்தலிலேயென அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியதால் அங்கிருந்த மாணவர்கள் ஆர்ப்பரித்துச் சத்தமிட்டனர். இதனால் கூட்ட அரங்கில் சிரிப்பலை எழுந்தது.
பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் பொதுத்தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கும் விழா குன்றத்தூர் அடுத்த கோவூரில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்குப் பொது தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்களைக் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழங்கினார்.
அப்போது அவர் மேடையில் மாணவர்கள் மத்தியில் பேசும்போது தேர்வைக் குறித்து பயம் வேண்டாம் எனவும் பயப்படாமல் தேர்வு எழுத வேண்டும் எனவும் படித்த பாட புத்தகத்திலிருந்து தான் கேள்வி வரப்போகிறது அதனால் எதற்கும் பயப்படாமல் தேர்வு எழுத வேண்டும் அதிக மதிப்பெண் பெற்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பெருமை தேடி தர வேண்டும் எனக் கூறிய அவர் வருகின்ற தேர்வு எனக் கூறுவதற்கு பதிலாக வருகின்ற தேர்தலிலேயெனக் கூறியதால் அங்கி


