சிரியாவில் ட்ரோன் தக்குதலில் 112 பேர் உயிரிழப்பு.
சிரியாவில் ஹோம்ஸ் மாகாணத்தில் ஆளில்லா விமானம் தாக்கியதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்த நிலையில் தற்போது இறப்பு எண்ணிக்கை 112 பேராக உயர்ந்துள்ளது. 240-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ராணுவப் பயிற்சி மையத்தில் இத்தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவின்போது நடத்தப்பட்டதால் ராணுவ வீரர்கள் இறந்துள்ளதாகவும், பலர் காயமுற்றதாகவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவம் விழா நிகழ்ச்சியின்போது நிகழ்ந்துள்ளதால் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், பெண்கள், குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்சதியில் ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்புக்குத் தொடர்புள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது


