யமுனை நதி சீரமைப்பு திட்டம் – உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்!

தில்லியில் யமுனை ஆற்றைத் தூய்மைப்படுத்திச் சீரமைக்கும் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடக்கி வைத்தும் அடிக்கல் நாட்டியும் உள்ளார்.

தில்லியில் மாசுபட்டுள்ள யமுனை ஆற்றுக்குப் புத்துயிர் ஊட்டும் வகையில் தில்லி நீர்வாரியத்தின் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இன்று தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு இந்தத் திட்டங்களைத் தொடக்கி வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

விழாவில் பேசிய அமித் ஷா, தில்லியில் பாஜக ஆட்சி அமைந்த ஒரு மாதத்தில் யமுனையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்துக்காக ஒரு கூட்டத்தைப் பிரதமர் கூட்டி விவாதித்ததாகத் தெரிவித்தார். யமுனை ஆற்றைத் தூய்மைப்படுத்தும் தனது நோக்கத்தைத் தில்லி அரசுக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் பிரதமர் எடுத்துரைத்ததாகக் கூறினார். ஏற்கெனவே இந்தத் திட்டத்தில் 40 விழுக்காடு நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறினார். கழிவுநீரைச் சுத்திகரித்தல், புதிய குடிநீர்த் திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆகியன இந்தத் திட்டத்தில் அடங்கும் என்று அமித் ஷா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *