Swati Maliwal: கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் கைது!

Advertisements

ஸ்வாதி மாலிவாக் தாக்கப்பட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளரான பிபவ் குமாரை டெல்லி போலீசார் இன்று கைது செய்தனர்.

புதுடெல்லி:ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவால் வீட்டில் அவரது தனிச்செயலாளரால் தாக்கப் பட்டேன் எனப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்வாதி மாலிவால் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது, பிபவ் குமார் மீதான குற்றச்சாட்டுகுறித்து விசாரணை நடத்தினர்.

கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாதி மாலிவால் தாக்கப்படவில்லை. இது பா.ஜ.க.வின் சதியென ஆம் ஆத்மி கட்சியின் மந்திரி அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அதிஷி கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்ததிலிருந்து பா.ஜ.க. கலக்கம் அடைந்துள்ளது. இதனால் ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவால் வீட்டிற்கு கடந்த 13-ம் தேதி அனுப்பி பா.ஜ.க. சதித்திட்டம் வகுத்துள்ளது. முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றம்சாட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். ஆனால், அவர் அங்கே இல்லை என்பதால் அவர் பாதுகாக்கப்பட்டாரெனத் தெரிவித்தார்.

இதற்கிடையே, முதல் மந்திரி கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார், ஸ்வாதி மாலிவால் மீது சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில், ஸ்வாதி மாலிவாக் தாக்கப்பட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளரான பிபவ் குமாரை டெல்லி போலீசார் இன்று கைது செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *