நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்.கட்டிடங்கள் இடிந்து விழுந்து 132 பேர் பலி!.
நேபாளத்தின் ஜாஜர் கோட் மாவட்டம் லாமிடாண்டா பகுதியில் மையமாகக் கொண்டு நவம்பர் 3-ஆம் தேதி நள்ளிரவு 11.32 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் 15 வினாடிகளுக்கு மேல் நீடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.

தலைநகர் காத்மாண்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் உணரப்பட்டதையடுத்து பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. ரக்கூம் மற்றும் ஜாஜர் கோட் ஆகிய மாவட்டங்களில் மட்டும் 132 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுவதாக தெரிகிறது.
மீட்பு பணிகளில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் உள்ள பொருட்கள் குலுங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், வீடுகளில் இருந்து அலறியடித்தபடி ஓடிவந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
டில்லி, உத்திரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


