Suriya & Jyothika: ‘ஜிம் ஒர்க்அவுட்’ … ஜோடியாக பயிற்சி செய்த ஜோதிகா – சூர்யா!

ஜோதிகா – சூர்யா இருவரும் ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.

சினிமாவில் இருவரும் நடித்து வருவதால் உடலை கட்டுக்கோப்பாக வைக்க ஜிம் ஒர்க்கவுட்டில் ஈடுபட்டு உள்ளனர்.

பிரபல நடிகை ஜோதிகா- நடிகர் சூர்யா இணைந்து 1999 -ம் ஆண்டு இயக்குனர் வசந்தின் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் நடித்தனர்.

சூர்யா- ஜோதிகா மொத்தம் 7 படங்களில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்நிலையில் 2006 -ல் திருமணம் செய்தனர், இவர்களுக்கு தியா என்ற மகள், தேவ் என்ற மகன் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது ஜோதிகா ஷைத்தான் படத்தில் நடித்தார்.தற்போது மேலும் சில இந்தி படங்களில் ஜோதிகா நடிக்க உள்ளார். நடிகர் சூர்யா தற்போது ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜோதிகா – சூர்யா இருவரும் ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்கும் வகையில் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *