
முதன் முதலாக மலையாள சினிமாவில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் அவருக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் தொடர்ச்சியாக பல டாப் தமிழ் ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் இவருக்கு குவியவே இவரின் புகழ் உயர துவங்கியது. ஆம், விஜய், சூரியா, சிவகார்த்திகேயன் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பின்னர், தெலுங்குப் திரையுலகில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார் கீர்த்தி சுரேஷ்.
நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான “சாணிக் காயிதம்” படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக “மகாநடி” படத்திற்காக சிறந்த நடிகைக்காக தேசிய விருதை வென்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இதனிடையே சமீபத்தில் வெளியான “மாமன்னன்” படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு முக்கியத்துவம் இல்லை என்று விமர்சனங்கள் வந்திருந்தாலும் படத்தின் வெற்றி காரணமாக கீர்த்தி சுரேஷ் சம்பளத்தை உயர்த்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ₹3 கோடி கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே கீர்த்தி சுரேஷ் தற்போது கண்ணிவெடி என்ற நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைக்களத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.


