Super Blue Moon: நீல நிறமகா இன்று வானில் தோன்றும்!

Advertisements

அறிவியல்பூர்வமாகப் பார்க்கையில் வளிமண்டல நிகழ்வுகளால் ஒளிச்சிதறல் ஏற்பட்டு நிலவு நீல நிறமாகத் தென்படும். சூப்பர் மூன் நிகழும் நேரத்தில் இந்த ஒளிச்சிதறலும் ஏற்படுவதால் இந்தச் சூப்பர் ப்ளூ மூன் தெரியும் அதிசயத்தை வெறும் கண்ணாலும் பார்க்கலாம் என்கின்றனர்…

புதுடில்லி: வானில் தோன்றும் அரிய நிகழ்வாக ‘சூப்பர் ப்ளூ மூன்’ எனப்படும் நீல நிற பிரகாசமான நிகழ்வு இன்று (ஆக.,30) வானில் தோன்ற உள்ளது. இதனை வெறும் கண்ணால் காணலாமெனக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் முழு நிலவு தோன்றும் நிகழ்வைப் பவுர்ணமியாகப் பார்க்கிறோம்.

அதுவே ஒரே மாதத்தில் இரு பவுர்ணமி வரும் பட்சத்தில் 2வது பவுர்ணமியை ‘சூப்பர் மூன்’ எனக் குறிப்பிடுவர். அந்த வகையில் இன்று (ஆக.,30) நிகழும் பவுர்ணமி ‘சூப்பர் மூன்’ ஆகப் பார்க்கப்படுகிறது.

இது சாதாரண நாட்களைவிடப் பூமிக்கு மிக அருகில் தென்படுவதால் அதிக பிரகாசமாகக் காட்சியளிக்கும் எனக் கூறப்படுகிறது. அதிலும், இன்று ‘சூப்பர் ப்ளூ மூன்’ போன்று தெரியும் எனக் கூறப்படுகிறது.

பிரகாசமாகவும் நீல நிறத்திலும் தெரியும் இந்தச் சூப்பர் ப்ளூ மூன், அறிவியல்பூர்வமாகப் பார்க்கையில் வளிமண்டல நிகழ்வுகளால் ஒளிச்சிதறல் ஏற்பட்டு நிலவு நீல நிறமாகத் தென்படும். சூப்பர் மூன் நிகழும் நேரத்தில் இந்த ஒளிச்சிதறலும் ஏற்படுவதால் இந்தச் சூப்பர் ப்ளூ மூன் தெரியும் அதிசயத்தை வெறும் கண்ணாலும் பார்க்கலாம் என்கின்றனர்.

இத்தகைய அரிய நிகழ்வு தான் இன்று இரவு (ஆகஸ்ட் 30) மற்றும் நாளை அதிகாலை (ஆகஸ்ட் 31) நடக்கவுள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 9:30 மணிக்கு அதிகபட்ச ஒளியுடன் ப்ளூ மூன் நிகழ்வு தொடங்கும். இது படிப்படியாக அதிகரித்து நாளைக் காலை 7:30 மணிக்கு உச்சம் தொடும்.

அமெரிக்காவில் இரவு 8:37 மணிக்கு (இந்திய நேரப்படி நாளைக் காலை) சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வைப் பார்க்கலாம். லண்டனில் இரவு 8.08 மணிக்குப் பார்க்க முடியும். வானில் சரியாகப் பார்க்க முடியாதவர்கள் The Virtual Telescope Project என்ற வெப் டிவியின் மூலம் நேரலையில் பார்க்கலாம்.

இந்த இணையதளத்தில் இந்திய நேரப்படி நாளை (ஆகஸ்ட் 31) காலை 9 மணி முதல் பார்க்கலாமெனக் கூறப்பட்டுள்ளது. அடுத்த சூப்பர் ப்ளூ மூன் 2037ம் ஆண்டு நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு நிலவு

புதுடில்லி: வானில் தோன்றும் அரிய நிகழ்வாக ‘சூப்பர் ப்ளூ மூன்’ எனப்படும் நீல நிற பிரகாசமான நிகழ்வு இன்று (ஆக.,30) வானில் தோன்ற உள்ளது. இதனை வெறும் கண்ணால் காணலாமெனக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் முழு நிலவு தோன்றும் நிகழ்வைப் பவுர்ணமியாகப் பார்க்கிறோம். அதுவே ஒரே மாதத்தில் இரு பவுர்ணமி வரும் பட்சத்தில் 2வது பவுர்ணமியை ‘சூப்பர் மூன்’ எனக் குறிப்பிடுவர். அந்த வகையில் இன்று (ஆக.,30) நிகழும் பவுர்ணமி ‘சூப்பர் மூன்’ ஆகப் பார்க்கப்படுகிறது.

இது சாதாரண நாட்களைவிடப் பூமிக்கு மிக அருகில் தென்படுவதால் அதிக பிரகாசமாகக் காட்சியளிக்கும் எனக் கூறப்படுகிறது. அதிலும், இன்று ‘சூப்பர் ப்ளூ மூன்’ போன்று தெரியும் எனக் கூறப்படுகிறது.
பிரகாசமாகவும் நீல நிறத்திலும் தெரியும் இந்தச் சூப்பர் ப்ளூ மூன், அறிவியல்பூர்வமாகப் பார்க்கையில் வளிமண்டல நிகழ்வுகளால் ஒளிச்சிதறல் ஏற்பட்டு நிலவு நீல நிறமாகத் தென்படும்.

சூப்பர் மூன் நிகழும் நேரத்தில் இந்த ஒளிச்சிதறலும் ஏற்படுவதால் இந்தச் சூப்பர் ப்ளூ மூன் தெரியும் அதிசயத்தை வெறும் கண்ணாலும் பார்க்கலாம் என்கின்றனர்.

இத்தகைய அரிய நிகழ்வு தான் இன்று இரவு (ஆகஸ்ட் 30) மற்றும் நாளை அதிகாலை (ஆகஸ்ட் 31) நடக்கவுள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 9:30 மணிக்கு அதிகபட்ச ஒளியுடன் ப்ளூ மூன் நிகழ்வு தொடங்கும். இது படிப்படியாக அதிகரித்து நாளைக் காலை 7:30 மணிக்கு உச்சம் தொடும்.அமெரிக்காவில் இரவு 8:37 மணிக்கு (இந்திய நேரப்படி நாளைக் காலை) சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வைப் பார்க்கலாம்.

லண்டனில் இரவு 8.08 மணிக்குப் பார்க்க முடியும். வானில் சரியாகப் பார்க்க முடியாதவர்கள் The Virtual Telescope Project என்ற வெப் டிவியின் மூலம் நேரலையில் பார்க்கலாம்.இந்த இணையதளத்தில் இந்திய நேரப்படி நாளை (ஆகஸ்ட் 31) காலை 9 மணி முதல் பார்க்கலாமெனக் கூறப்பட்டுள்ளது. அடுத்த சூப்பர் ப்ளூ மூன் 2037ம் ஆண்டு நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *