Suicide: வரதட்சணை கொடுமை.. இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை!

Advertisements

சங்கராபுரம் அருகே காதலித்து திருமணம் ஆகி ஓராண்டே ஆனபெண்ணை வரதட்சணை கேட்டு மாமியார்  செருப்பால்  அடித்தால் மனமுடைந்த இளம் பெண்  சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள செம்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த  சின்னதுரை மகள் சசிகலா வயது-23 இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்  காதலித்து கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையும் உள்ளது. இந்தநிலையில் சசிகலாவின் மாமியார் பார்வதி நாத்தனார் சங்கீதா திருமணமாணதிலிருந்தே வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையை கடந்த சில நாட்களுக்கு முன்பு உங்கள் அப்பா வீட்டில் திருமணத்திற்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை தற்போது இப்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.அதற்கு உன் அப்பாவிடம் 20 பவுன் கேட்டு வாங்கி கொடு என மாமியார் பார்வதியும் நாத்தனார் சங்கீதாவும் கணவர் விக்னேஷும் கடந்த சில நாட்களுக்கு முன்பு  கேட்டுத் தகராறில் ஈடுபட்டதாகவும் அதற்குச் சசிகலா அதையெல்லாம் என்னால் வாங்கி தர முடியாது எனச் சசிகலா கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஆத்திரமடைந்த மாமியார் பார்வதியும் நாத்தனார் சங்கீதாவும் சசிகலாவை செருப்பால் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான கட்சிகலா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மதியம்  சமையல் அறையில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றித் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் காவல்துறையினர்  சசிகலாவின் உடலைக்கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகக் கள்ளக்குறிச்சி தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  சசிகலாவின் தாயார் ராணி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  கணவர் விக்னேஷ்  மாமியார் பார்வதி நாத்தனார் சங்கீதா ஆகிய மூவரையும் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் வரதட்சணை கொடுமையால் காதலித்து திருமணம் செய்து கொண்ட 23 வயது பெண் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையின் எதிர்கால வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாக உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *