முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் உடல்நலக்குறைவால் தனது 78 ஆவது வயதில் காலமானார். சிவகங்கை மாவட்டம், எரியூர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் உடல்நலக்குறைவால் தனது 78 ஆவது வயதில் காலமானார். இவர், 1999 ஆம் ஆண்டில் மக்களவைக்கு சிவகங்கை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2004 ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்தார். மாநிலங்களவை தலைமைக் கொறடாவாக பணியாற்றி, மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளார். அவரது மறைவு செய்தி அறிந்து அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் சுதர்சன நாச்சியப்பன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைத்தளப் பதிவில், மூத்த காங்கிரஸ் தலைவர் சுதர்சன நாச்சியப்பன் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்ததாகத் தெரிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்க உரிமைக் குரல் எழுப்பியவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
நாளை சிவகங்கை மாவட்டம், ஏரியூரில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சிவகங்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் உடலுக்கு காங்கிரஸ் நாடளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அஞ்சலி செலுத்தினார்.

