Advertisements

கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அவர் தமிழக பாஜக தலைவராக பணியாற்றினார்.
தற்பொழுது பாஜகவில் அவருக்கு பதவி எதுவும் வழங்கப்படவில்லை இருந்தபோதிலும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார் . இதற்கிடையே கோவை அருகே அவர் விவசாய நிலம் வாங்கியது குறித்து பல பரபரப்பு தகவல்கள் பேசப்படுகின்றன .
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே இக்கரை எந்த கிராமத்துக்கு அருகே போலுவம்பட்டி என்ற இடத்தில் அவர் நில விவசாய நிலம் வாங்கி இருக்கிறார் . இந்த நிலம் நொய்யல் ஆட்டம் கரையோரம் இருக்கிறது . நொய்யல் ஆறு என்பது எந்த நேரமும் தண்ணீர் வசதி உள்ளது .
இங்குதான் அவர் விவசாய நிலம் வாங்கி இருக்கிறார் இது பற்றி சில வதந்திகள் கிளம்பிய போது அதற்கு அவர் விளக்கம் அளித்தார் . அவர் விளக்கம் அளித்த போது நான் நிலம் வாங்கி இருப்பது உண்மைதான் அந்த நிலம் எனது மற்றும் எனது மனைவியின் சேமிப்பு மற்றும் வங்கி கடன் மூலம் வாங்கி இருக்கிறோம். அந்த நிலத்திற்கு உண்டான பதிவு தொடர்பாக 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஸ்டாப் செலவு செய்திருக்கிறேன்.
நான் வாங்கிய முதல் சொத்து இதுதான். என் மனைவி பெயரில் பவர் ஆப் அட்டானமி எழுதிக் கொடுத்து இந்த நிலை வாங்கப்பட்டு இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார் . எவ்வளவு நிலம் எவ்வளவு விலை என்பதை பற்றி அவர் குறிப்பிடவில்லை
தற்பொழுது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கிறது .
நொய்யல் ஆற்றங்கரை அருகே அவர் வாங்கிய நலத்தின் அளவு 12.14 ஏக்கர் என்கிறார்கள் இதில் 7 ஏக்கர் அளவுக்கு பாக்கு மரம் வளர்ந்து இருக்கிறது . மீதமுள்ள இடத்தில் வாழை மரங்கள் மற்றும் நெல் வகைகள் பயிரிடப்பட்டுள்ளன . இதன் மதிப்பு ஒரு சென்டுக்கு 5 லட்ச ரூபாய் இருக்கும் என்கிறார்கள் . மொத்தத்தில் 80 கோடி ரூபாய் அளவில் இதன் நில மதிப்பு இருக்கும் என்கிறார்கள்.
ஆனால் இந்த நிலத்தை மொத்தம் நாலரை கோடி ரூபாய்க்கு பேசி அண்ணாமலை வாங்கி இருக்கிறார் . இந்த நிலம் அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நெருங்கிய நண்பருமான பிரதீப் என்பவர் மற்றும் அவரது சித்தப்பா பெருமாள் சாமி மற்றும் அவரது வாரிசுகளிடமிருந்து இந்த நிலத்தை அண்ணாமலை வாங்கி இருக்கிறார்.
Advertisements


