
பரங்கிமலையில் 3200 கோடி மதிப்புடைய 13 ஏக்கர் நிலத்தைச் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருள் ராஜ் உத்தரவின்படி பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையை அடுத்த பரங்கிமலை ஜி எஸ் டி சாலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் அரசு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தனர்.
குத்தகை காலம் முடிந்த பின்னரும் நிலத்தை அரசுக்கு ஒப்படைக்காமல் அரசுக்குச் சொந்தமான இடத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி வந்து உள்ளனர்.
இந்தநிலையில் அரசுக்குச் சொந்தமான இடத்தை மீட்க உயர் நீதி மன்றம் உத்தரவுப்படி ,செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருள் ராஜ் ஆணைங்கினங்க பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர் .
குறிப்பாக இதுவரை மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு 3200 கோடி மதிப்புடைய 13 ஏக்கர் சொத்துக்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாகச் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான இடங்களைப் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து வைத்து நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி அதிரடியாகப் பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் வருவாய் துறையினர் மீட்கும் பனியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் எனத் தெரிவித்தார்.

