
இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை!
கொழும்பு: இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை வர விசா தேவையில்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து நாட்டினர் இலங்கை செல்ல விசா தேவையில்லை என்ற திட்டத்தைச் சோதனை முயற்சியாக மார்ச் 31-ம் தேதிவரை அமல்படுத்த இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கு, முன்னோடித் திட்டமாக மார்ச் 31 வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலவச விசாக்களை வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கை சுற்றுலாவை மேம்படுத்துவதையும், இந்த முக்கிய சந்தைகளுக்குத் தீவுத் தேசத்தை அணுகக்கூடியதாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாற்றம் இலங்கை வழியாகப் பயணிக்கும்போது அவர்கள் எதிர்கொள்ளும் இடையூறுகளைக் குறைப்பதன் மூலம் போக்குவரத்து பயணிகள் பயனடையலாம் என்று இலங்கை சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்
சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விசாவிலிருந்து விலக்கு அளிப்பதன் நோக்கமாகும். அதன்படி, வரும் ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை 5 மில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது”. சீன சுற்றுலாப் பயணிகளின் பயணத்திற்காகச் சீனா அறிவித்துள்ள 20 நாடுகளில் இலங்கையும் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
உத்தேச திட்டமானது, வீசாக்களை பெறுவதற்கு செலவிடும் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும் எனவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாட்டிற்கு வருகை தரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இலங்கையில் உள்ள பெரும்பாலான சுற்றுலாத் தளங்களுக்கு இ-டிக்கெட் முறை அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

