Sri Lanka – Drugs Seized: ரூ.108 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது!

Advertisements

இலங்கை்கு கடத்த முயன்ற ரூ.108 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை, டெல்லி சிறப்பு காவல்துறை நடத்திய சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மொத்த மதிப்பு ரூ. 2,000 கோடி எனவும் தெரிய வந்துள்ளது.

மேலும், இந்தப் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டது திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக, அவர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, போதை பொருள் விவகாரம் தொடர்பான ஆஜராகுமாறு ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது.

ஆனால், அவர் ஆஜராகததால் ஜாபர் சாதிக் வீட்டுக்குப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சீல் வைத்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

இந்த நிலையில், இலங்கை்கு கடத்த முயன்ற ரூ.108 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அவர்கள், இந்திய கடலோர காவல்படையுடன் இணைந்து தனுஷ்கோடி கடலில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, நடுக்கடலில் இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்ற ரூ.108 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமின் என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாகக் கடத்தல்காரர்கள் 3 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *