Sithampalam: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

Advertisements

பைக் வாங்கித்தர மறுத்ததால் உயிரை மாய்த்து கொண்ட வாலிபர்!

திருப்பூரில் விலை உயர்ந்த கேடிஎம் பைக்கை தாய் வாங்கித்தர மறுத்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சித்தம்பலம் பகுதியில் வசித்து வருபவர் சிவகாமி. இவரது கணவர் ராஜா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். மகன் சௌந்தர்ராஜன் (வயது 19) அங்குள்ள மட்டை வண்டிக்கு வேலைக்குச் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாகச் சௌந்தர்ராஜன் அவரது அம்மா மற்றும் அக்காவிடம் தொடர்ந்து விலை உயர்ந்த பைக்கான கே டி எம்பைக்கை வாங்கித் தர வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று வழக்கம்போல் விலை உயர்ந்த கே டி எம்பைக் வேண்டுமென்று வீட்டில் சண்டையிட்டு விட்டு வெளியில் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே நேற்று மாலை பல்லடம் உடுமலை சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தொங்கிக் கொண்டு இருப்பதாகப் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அங்குச் சென்ற பல்லடம் போலீசார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காகப் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தூக்கில் தொங்கிய வாலிபர் சித்தம்பலம் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பது தெரியவந்தது.

இளைஞர் மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பல்லடம் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்லடம் அருகே விலை உயர்ந்த பைக்கான கேடிஎம் பைக் வாங்கித் தராததால் மனம் உடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *