
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் வரதட்சணைக் கொடுமை காரணமாக புதுமணப் பெண் ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
ஜாமீன் பெற்று வீடு திரும்பிய போது, வீட்டில் ரிதன்யாவுக்கு சொந்தமான இரண்டு மொபைல் போன்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவற்றை ஆய்வு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி கவின் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி என். சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, ரிதன்யாவின் இரண்டு மொபைல் ஃபோன்களை ஆய்வு செய்ய காவல்துறையினரிடம் கூறியபோது அவர்கள் மறுத்துவிட்டதாகவும் திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று தோழிகளிடம் ரிதன்யா பேசிய விவரங்கள் போனில் இருப்பதால், அந்த விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என கவின் குமார் தரப்பில் வாதிடப்பட்டது.
மொபைல் போன்களை புலன் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்தால் அவை ஆய்வு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இரண்டு செல்போன்களையும் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.





