முதன்முறையாக 95 ரூபாயைக் கடந்தது டாலர்.. கவலையில் முதலீட்டாளர்கள்..!

Advertisements

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லா வகையில் வீழ்ச்சியடைந்து 95 ரூபாய் 85 காசுகளாக உள்ளது.
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அதேபோல் இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீட்டைத் திரும்பப் பெற்று வருகின்றனர். இதனால் இந்திய பொருளாதாரத்தின் மீதும் ரூபாயின் மீதும் அழுத்தம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லா வகையில் 95 ரூபாய் 95 காசுகள் என்னும் அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.

உலகளாவிய நிலையற்ற தன்மை, புவி அரசியல் பதற்றங்கள் அதிகரிப்பு ஆகியவற்றின் எதிரொலியாகவே ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக வணிகர்களும், பொருளாதார ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *