Jewelry Lover’s: நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி!

Advertisements

சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாக உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் தங்கத்தின் விலை மாறுபடும்.

தற்போது இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே நடந்து வரும் சண்டை உச்சமடைந்து உள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்ந்துவிட்டது. இதன் காரணமாகத் தங்கத்தின் விலையும் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது.

நேற்று தங்கத்தின் விலை கிராம் ரூ. 5,635- ஆகவும், பவுன் ரூ. 45,080 ஆகவும் இருந்தது.

இந்நிலையில், இன்று ஒரே நாளில் கிராம் ரூ.65-ம், பவுன் ரூ. 520-ம் அதிகரித்துள்ளது. இன்று கிராம் ரூ. 5700-க்கும், பவுன் ரூ. 45,600-க்கும் விற்பனை ஆகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *