Shobha Karandlaje:பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் தமிழகம் பயனடையவில்லை’!

Advertisements

நாமக்கல்: ”தமிழகத்தில் அனைத்து விவசாயிகளும், பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் இதுவரை பயன் பெறவில்லை,” என, மத்திய விவசாயத்துறை இணை அமைச்சர், ஷோபா கரந்த்லாஜே கூறினார்.

இதுகுறித்து, நாமக்கல்லில் அவர் கூறியதாவது: பிரதமரின், விவசாயி களுக்கான கவுரவ நிதி திட்டத்தின், 17வது தவணையின் கீழ், 9.26 கோடி பயனாளிகளுக்கு, 20,000 கோடி ரூபாய் பணப் பரிமாற்றத்தை, ஒரே நேரத்தில் பிரதமர் மோடி விடுவித்துள்ளார்.

மேலும், ‘இப்கோ’ மூலம் வேளாண் தோழிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. மகளிரின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு, பிரதமர் நாடு முழுதும் இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரை, பிரதமரின் விவசாய நிதி திட்டம் ஒவ்வொரு விவசாயிக்கும் கிடைக்க வேண்டும். அதற்கு, அவர்கள் தங்கள் பெயரைத் திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதற்கான அரசு அலுவலர்கள், விவசாயிகளின் பெயர்களைப் பதிவு செய்வதில் முன்னுரிமை கொடுத்துச் செயல்பட வேண்டும். இதுவரை வருமான வரி செலுத்தாதவர்கள் திட்டத்தில் பயன்பெற முடியும்.

தமிழகத்தில் அனைத்து விவசாயிகளும், இந்தத் திட்டத்தில் இதுவரை பயன் பெறவில்லை. அனைத்து விவசாயிகளும் பயன் பெற, அவர்களின் பெயர்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *