Shivani Narayanan: பட வாய்ப்பைப் பிடிக்கக் கவர்ச்சி தூண்டில்!

Advertisements

வெள்ளித்திரையில் ஹீரோயின் வாய்ப்புகளைத் தேடி கொண்டிருக்கும் ஷிவானி நாராயணன் பொங்கலை முன்னிட்டு, வெளியிட்டுள்ள போட்டோஸ் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆகி வருகிறது.

சிறு வயதிலேயே நடிகை ஆக வேண்டும் என்பதை தீர்மானித்து விட்டவர் ஷிவானி நாராயணன். இவரின் ஆசைக்கு ஷிவானியின் அம்மாவும் உறுதுணையாக நின்றார்.

ஸ்கூல் படிக்கும் போதே, சீரியல்களில் சின்ன சின்ன ரோல்களில் நடிக்கத் துவங்கினார். பின்னர் உடல் எடையைக் குறைத்து… ஹீரோயின் லுக்கிற்கு மாறிய ஷிவானிக்கு சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில், பகல் நிலவு சீரியலில் அசீமுக்கு தன்னுடைய 16 வயதிலேயே ஜோடியாக நடித்தார். இந்தச் சீரியலில் அசீம் மற்றும் ஷிவானியின் லவ் கெமிஸ்ட்ரி வேற லெவலுக்கு பேசப்பட்டது.

எனவே ‘பகல் நிலவு’ சீரியல் முடிந்த கையேடு கடைக்குட்டி சிங்கம் சீரியலிலும் இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்தனர். அந்த நேரத்தில் அசீம் மற்றும் அவருடைய மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குக் காரணம், ஷிவானி தானெனப் பேச்சுகள் அடிபடத் துவங்கியது.

இந்தச் சர்ச்சைக்கு ஷிவானி தரப்பிலிருந்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை என்றாலும், அந்தச் சீரியலிலிருந்து சைலண்டாக விலகி இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

விஜய் டிவி சீரியலிலிருந்து ஜீத்தமிழுக்கு தாவிய ஷிவானி, ரெட்டை ரோஜா என்கிற தொடரில் இரட்டை வேடத்தில் நடித்தார். இந்தத் தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போதே… பிக்பாஸ் வாய்ப்பை ஏற்று பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் காத்து கொண்டார்.

பட வாய்ப்பை டார்கெட் செய்து ஷிவானி இந்த வாய்ப்பை ஏற்று கொண்ட நிலையில், மிகவும் பொறுமையாகத் தரமான கதையைத் தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ படத்தில்  விஜய் சேதுபதிக்கு மூன்றாவது மனைவியாக நடித்த ஷிவானி, இதைத் தொடர்ந்து டி.எஸ்.பி, நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், பம்பர் ஆகிய படங்களில் நடித்தார்.

பட வாய்ப்பைப் பிடிக்க, இன்ஸ்டாகிராம் மூலம் கவர்ச்சி தூண்டில் போட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பொங்கலை முன்னிட்டு ஷிவானி வெளியிட்டுள்ள போட்டோஸ்… பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது.

ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் மீது ஷிவானி சேலை கட்டியுள்ள நிலையில், நெட்டிசன்கள் உள்ளாடை மீது சேலை காட்டியது போல் இருப்பதாகவும், அவர் இந்த உடையில் நல்ல இல்லையெனக் கமெண்ட் போட்டுத் தெரிவித்து வருகிறார்கள். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *