Seventh Day Adventist Church: திருச்சபைக்கு எதிராகத் தர்ணாவில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள்!

Advertisements

பெருங்களத்தூர்  இரணியம்மன் கோவில் அருகே உள்ள திருச்சபையில் 60 கோடிரூபாய் வரை ஊழல் நடந்ததாகக் கூறி திருச்சபை நிர்வாகிகள் பலர் திருசபை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

சென்னை பெருங்களத்தூர் இரணியம்மன் கோவில் அருகே செவென்த் டே அட்வென்டிஸ்ட்ஸ் திருச்சபை உள்ளது.இந்தத் திருசபையின் கீழ் 27 பள்ளிகூடங்களும், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்தத் திருசபை நிர்வாகிகள் பல்வேறு முறைகேடுகளில்  ஈடுபட்டதாகக் கூரி அவர்களைக் கண்டித்து, சபை நிர்வாகிகள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் திருசபை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து திருசபைக்குள் சென்று பிராத்தனை செய்யவும் முற்றபோது உள்ளே செல்ல அனுமதிக்காததால் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்த ஓட்டேரி காவல் ஆய்வாளர் ரெங்கராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட செவென்த் டே அட்வென்டிஸ்ட்ஸ் திருச்சபை காப்பு சங்கத்தின் தலைவர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறும்போது,

சர்ச் கட்டுவதாகவும், பள்ளி கூடங்கள் கட்டுவதாகவும் கூறி சுமார் 60 கோடி ரூபாய் அளவில் திருசபை நிர்வாகிகள் ஊழல் செய்தகாவும் குற்றம்சாட்டினர்.

பல கோடி ரூபாய் ஊழலையும், தொடர்ந்து கொள்ளைபோகும்  திருச்சபை சொத்துக்களையும் காக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *