
திண்டிவனத்தில் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அதிநவீன மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டிடப் பணிகள் முடிந்து மூன்று மாதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைக்கப்பட உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் பொதுப்பணித் துறை சார்பில் திண்டிவனத்தில் அதிநவீன மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அதிநவீன மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டிடத்தில் மருந்தகம், எம்.ஆர்.ஐ,எக்ஸ் ரே,சி.டி. ஸ்கேன்,அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம்,குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு,உயர் சார்பு அலகு குழந்தைகள் பிரிவு,5 அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளிட்ட நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனை கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளைமருத்துவம்மற்றும்மக்
இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 2022ல் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் 25 புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் தொடங்குவதற்கு உத்தரவிட்டார்கள் இதற்காக 1100 கோடிரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளுடன் ஐந்து அடுக்கு மாடி கட்டிடம் கட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
விரைவில் மருத்துவத் துறையில் மருத்துவர்கள் நியமனம் நடைபெற உள்ளது.1021 மருத்துவர்கள் பத்து நாளில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இன் முகத்துடன் பணியாற்றி வருகின்றனர்.திண்டிவனத்தில் கட்டப்பட்டு வரும் அதிநவீன மருத்துவமனையைப் பணிகள் முடிந்தவுடன் 3 மாதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஆய்வின்போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பழனி, சார் ஆட்சியர் திவ்யன்சு நிகம், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் பருதி, விழுப்புரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர்.செந்தில்குமார், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி மாவட்ட அவை தலைவர் டாக்டர்.சேகர், பொருளாளர் ரமணன்,நகர செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



