
இலங்கைக்கு நெருக்கடியான காலத்தில் இந்தியாவும், தமிழ்நாடும் பொருளாதார ரீதியான நிறைய உதவிகள் செய்துள்ளனர். இதனால் இருநாடுகளுக்குமான நட்புறவு மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை கிழக்கு மகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இலங்கை கவர்னராக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்ற பிறகு இலங்கை மீண்டும் வளமையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றும் இலங்கை தற்போது வளர்ச்சி பாதையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் நிலவிய நெருக்கடியான காலத்தில் இந்தியாவும், தமிழ்நாடும் பொருளாதார ரீதியில் நிறைய உதவிகள் செய்துள்ளனர். இதனால் மேலும் இரு நாடுகளுக்குமான நட்புறவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் கலாச்சாரம் அடிப்படையில் நெருங்கிய உறவு உண்டு என்றும் இலங்கையின் மதவழிபாடு இந்தியாவை சார்ந்ததாக உள்ளதாலும் அதிகமானோர் இந்தியாவில் உள்ள கோவிலுக்கு வருகின்றனர் என்றார்.
மேலும் ஆன்லைன் வர்த்தகத்தால் தமிழகத்திற்கும் இலங்கைக்குமான வணிக ரீதியிலான தொடர்பு குறைந்துள்ளதாகவும் தெரிவித்த அவர்இந்தியா பாரதம் எனப் பெயர் மாற்றம்குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.


