Senthil balaji case:உச்சநீதிமன்றம் தந்த கிரீன் சிக்னல்..ஜாமின் கிடைக்க வாய்ப்பு.! எப்படி தெரியுமா.?

Advertisements

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா என்பது குறித்து பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜாமின் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள புதிய விளக்கம், செந்தில் பாலாஜிக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

செந்தில் பாலாஜிக்கு செக் வைத்த அமலாக்கத்துறை

அதிமுக ஆட்சி காலமான 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை அமைச்சர்வையில் முக்கிய பொறுப்பில் இருந்தார் செந்தில் பாலாஜி, அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் பணம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணம் பரிமாற்றம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே அதிமுகவில் ஏற்பட்ட அடுத்தடுத்த மாற்றங்களால் திமுகவிற்கு பல்டி அடித்தார் செந்தில் பாலாஜி, அங்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருக்கும் மின்சாரத்துறை வழங்கப்பட்டது.

செந்தில் பாலாஜி கைது

இந்தநிலையில் அமலாக்கத்துறை நாடு முழுவதும் அரசியல் தலைவர்களை குறி வைத்து காய் நகர்த்திய நிலையில், அமைச்சர் பொறுப்பில் இருந்த செந்தில் பாலாஜி சிக்கினார். நீதிமன்ற உத்தரவின் படி விசாரணையை தீவிரப்படுத்திய அமலாக்கத்துறை பல இடங்களில் சோதனை நடத்திய நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிகாலை நேரத்தில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஜாமினை மறுத்த நீதிமன்றம்

சிகிச்சைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஒரு வருடமாக ஜாமின் கோரி பல முறை நீதிமன்றத்தின் கதவை தட்டினார். ஆனால் அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பின் காரணமாக செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காத நிலை உள்ளது. இந்தநிலையில் மீண்டும் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது அமலாக்கத்துறையின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி ஜாமின் தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்தது.

உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே சட்ட விரோத பணம் பறிமாற்றம் வழக்கில் சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் வேறோரு வழக்கு விசாரணையின் போது தெரிவித்துள்ளது. இல்லையென்றால் சிறையில் அடைக்கப்பட்ட நபருக்கு ஜாமின் வழங்கலாம் என கூறியுள்ளது. மேலும் சட்ட விரோத பண வழக்கில் பிரிவு 45 பிணை வழங்க 2 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென கூறினாலும் ஜாமின் தொடர்பான உரிமைகளை அதி பாதிக்காது என உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா.?

இந்த புதிய அறிவறுத்தல் காரணமாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்க கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே விரைவில் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் தீர்ப்பை திமுகவினர் ஆர்வமோடு எதிர்நோக்கி காத்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *