
அண்ணாமலையை மறைமுகமாக சாடிய செல்லூர் ராஜு!
மத்தியில் ஆளும் அரசின் கட்சியில் தமிழத்தில் பாஸ்ட் புட் தலைவர்கள் உருவாகி வருகின்றனர் என அண்ணாமலையை மறைமுகமாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மதுக்கடைகள் மூடப்படும் என்றும், ஒரு சொட்டு மது கூட தமிழகத்தில் கிடைக்காது என தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது பாட்டிலுக்கு 10 ரூபாய் கமிஷன் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். நம்ம செந்தில் பாலாஜி அதனை தொடங்கி வைத்தார். தற்போது முத்துசாமி தொடர்ந்து வருகிறார். அந்த பணம் எல்லாம் எங்கே போகிறது என தெரியவில்லை? என கேள்வி எழுப்பினார்.
நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து சூட்சமம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தற்போது கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்தது. அதனாலேயே 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு பெற்று இதன் மூலம் ஏழை எளிய மாணவ மாணவியர்கள் இலவசமாக மருத்துவம் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளார்.
மத்தியில் ஆளும் அரசின் கட்சியில் தமிழத்தில் பாஸ்ட் புட் தலைவர்கள் உருவாகி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள ரவுடிகள் அனைவரும் இன்றைக்கு பாஜகவில் தான் உள்ளனர். இந்திய ஜனநாயக நாட்டில் யார் வேண்டும் என்றாலும் பிரதமர் ஆகலாம் எந்த அளவுகோலும் இல்லை. எடப்பாடி பழனிசாமி ஏன் பிரதமராக கூடாது. அன்றைக்கு மத்திய அரசே அனைத்து மாநிலங்களுக்கும் தமிழகம் முன்மாதிரியாக இருக்கிறது என்று தெரிவித்து. எனவே எடப்பாடியார் பிரதமர் ஆக முழு தகுதியும் கொண்டவர் என செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

