Chief Minister M. K. Stalin: சிறு பிள்ளை விளையாட்டுக்கெல்லாம் பயப்படமாட்டோம்!

Advertisements

நான் ஸ்டாலின் அதுவும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், பாசிசத்தை எதேச்சி அதிகாரத்தை இந்தியாவில் நெஞ்சினு நிறுத்தி எதிர்கொண்டு இருக்கும் நான், இது போன்ற சிறு பிள்ளை விளையாட்டுத்தனத்தை பார்த்துப் பயந்து விடமாட்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட சட்மன்ற கட்சி உறுப்பினர் கலந்து கொண்டு விவாதம் நடத்தினர். இதற்குப் பதில் அளிக்கும் வகையில்,  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலுரை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், தந்தை பெரியாரின் வாரிசாக,  பேரறிஞரின் அண்ணாவின் வாரிசாக எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்பட்டு வருகிறேன்.  கலைஞர் இருந்திருந்தால் எப்படி ஆட்சி நடத்திருப்பாரோ அப்படியே நான் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறேன். கலைஞரின் நூற்றாண்டு விழாவில் திமுக ஆட்சியில் இருப்பது எங்களுக்குப் பெருமை.

கடந்த 12ஆம் தேதி ஆளுநர் உரையோடு இந்தக் கூட்டமானது தொடங்கி இருக்க வேண்டும். ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்க வேண்டும் என்பது சட்டமன்ற மரபு. அரசின் கொள்கையை அறிக்கையாக அமைச்சரவை தயாரித்து தருவதை அப்படியே வாசிக்க வேண்டியது தான் ஆளுநரின் பொறுப்பும், கடமை. ஆளுநர் தனது அரசியல் நடவடிக்கையின் தொடர்ச்சியாகவே இந்த மாமன்றத்தை பயன்படுத்திக் கொண்டாரோ என்று கருது தோன்றுகிறது. ஆளுநரின் செயல் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட தமிழக சட்டமன்றத்தையே அவமதிக்கும் செயல் அல்லவா கோடிக்கணக்கான தமிழக மக்களை அலட்சியப்படுத்தும் காரியம் அல்லவா.?

மக்களாட்சி மாண்புக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தை மீறித் தான் ஏற்றுக்கொண்ட பதவி பிரமாணத்திற்கு எதிராகச் செயல்படுவது அல்லவா.? எங்களைப் பொறுத்தவரை இது போன்ற எத்தனையோ தடைகளை உடைத்து வந்துள்ளோம். தடை கற்கள் உண்டு என்றால் அது உடைக்கும் சக்தி உண்டு என்பதை மெய்ப்பித்துக் காட்டும் வகையில்  75 ஆண்டுகால இயக்கத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் தகுதியோடு சொல்கிறேன்.

நான் ஸ்டாலின் அதுவும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், பாசிசத்தை எதேர்ச்சி அதிகாரத்தை இந்தியாவில் நெஞ்சினு நிறுத்தி எதிர்கொண்டு இருக்கும் நான். இது போன்ற சிறு பிள்ளை விளையாட்டுத்தனத்தை பார்த்துப் பயந்து விடமாட்டோம். போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும்.தொடர்ந்து செல்வேன்  எவரிடமும்  அஞ்சேன் என்பதுதான் இவர்களுக்கு நான் சொல்லும் பதில் என முதலைச்சர் ஸ்டாலின் ஆவேசமாகத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *