ஆர்எஸ்எஸ் நிறுவன நாள்: தொண்டர்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து.!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவன நாளையொட்டி அதன் தன்னார்வத் தொண்டர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.. அவர் விடுத்துள்ள செய்தியில், ஆர்எஸ்எஸ் நிறுவன நாளையொட்டி அதன் தன்னார்வத் தொண்டர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அதில் கடந்த நூறாண்டுகளில் இயக்கத்தின் வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நாட்டில் வளர்ச்சிக்குத் தொண்டாற்றுதல், நாட்டைக் கட்டமைத்தல், சமூக நல்லிணக்கத்துக்குப் பாடுபடுதல் என்ற வகையில் இயக்கம் நூறாண்டுகளை நிறைவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாடே முதன்மையானது என்ற கொள்கையுடன் அதன் நலனுக்கு எண்ணற்ற தொண்டர்கள் பணியாற்றியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இதே சிந்தனையுடன் நாட்டின் வளர்ச்சிக்கு வருங்காலத்திலும் பணியாற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார். விஜயதசமியையொட்டி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றியது பற்றியும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மோகன் பகவத்தின் உரையில் நாட்டின் முன்னேற்றம், சமுதாய ஒற்றுமை, தற்சார்பு, சமூகத்துக்கு அதிகாரமளித்தல் ஆகியன இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *