RR Gopaljee: தினமலர் உரிமையாளருடன் ஜெம் தொலைக்காட்சி நிறுவனர் சந்திப்பு!

ஜெம் தொலைக்காட்சியின் வெற்றி என்னென்றும் சிகரம் தொட வேண்டும் என்று தினமலர் உரிமையாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள தினமலர் அலுவலகத்தில்,  தினமலர் உரிமையாளரும், விஷ்வஹிந்து பரிஷத் மாநில தலைவரும், இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலருமான ஆன்மிகச் செம்மல் ஆர்.ஆர்.கோபால்ஜி அவர்களை, ஜெம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் என்.சீதாபதி அவர்கள் மரியாதை நிமிர்த்தமாகச் சந்தித்து பேசினார்.

அப்போது, ஆர்.ஆர்.கோபால்ஜி அவர்கள், ஜெம் தொலைக்காட்சியின் வெற்றி என்னென்றும் சிகரம் தொட வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, தமிழ் முற்றம் அமைப்பாளரும், ஜெம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் பொன்கி பெருமாள், ஜெம் டிவியின் செய்தி ஆசிரியர் மேனகா, இணை ஆசிரியர் தாமோதரன், மேலாளர் ராகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *