
விஜய் அரசியலுக்கு வந்தால் நின்று சண்டை போடவேண்டும்-சீமான்
தம்பி விஜய் அரசியலுக்கு முதலில் வரட்டும். அவரது கொள்கைகளை கூறட்டும். விஜயகாந்த் வலுவாக வந்தார். மாற்றம் என்று கூறியவர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்ததால் பின்னடைவை சந்தித்தார்.Seeman
தம்பி விஜய் அரசியலுக்கு முதலில் வரட்டும். அவரது கொள்கைகளை கூறட்டும். எம்.ஜி.ஆரே அரசியலுக்கு வருவதற்கு முதலில் தயங்கினார். ஜெயலலிதா புதிதாக கட்சி தொடங்கி இருந்தால் வென்றிருப்பாரா என்பது தெரியாது. விஜயகாந்த் வலுவாக வந்தார். மாற்றம் என்று கூறியவர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்ததால் பின்னடைவை சந்தித்தார்.
சிரஞ்சீவி, பவன் கல்யாண் போன்றவர்களாலும் வெல்ல முடியவில்லை. எனவே விஜய் அரசியலுக்கு வந்தால் நின்று சண்டை போடவேண்டும். விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை வாழ்த்துவோம். விஜய் கனவு வெல்ல எனது வாழ்த்துக்கள். கட்சி தொடங்கி உடனே வென்றால் அது புரட்சிதான்.


