பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், அடிலெய்டில் ஆஸ்திரேலியாவும் வென்று 1-1 எனச் சமனிலை வகிக்கிறது.
இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் இன்று தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இந்திய அணியில் 2 மாற்றங்களாக அஸ்வின், ஹர்ஷித் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக ஜடேஜா, ஆகாஷ் தீப் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு,
இந்தியா:
ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், ரோகித் சர்மா (கேப்டன்), ஜடேஜா, நிதிஷ் ரெட்டி, பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப்.
ஆஸ்திரேலியா:
உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் சுமித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹேசில்வுட்.