
நடிகை விஜய்லட்சுமி சீமான் மீது அளித்தப் புகாரின் பேரின் இன்று சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார்…
நடிகை விஜய்லட்சுமி சீமான் மீது அளித்தப் புகாரின் பேரின் இன்று சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். அப்போது காவல் நிலையத்தைச் சுற்றி கூடியிருந்த நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தள்ளுமுள்ளும் நடைபெற்றது.
தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியதாக நடிகை விஜய் லட்சுமி நாம் தமிழர் கட்சித் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பின் சீமான் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாமெனத் தெரிவித்துவிட்டுச் சென்ற விஜயலட்சுமி கடந்த மாதம் மீண்டும் சீமானை விசாரனை செய்யும்படி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தார். இந்தப் புகாரின் பெயரில் வளசரவாக்கம் போலிஸ் விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தியது.
இதையடுத்து, திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் பெறப்பட்டு நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு சம்மன் அளித்த நிலையில் செப்டம்பர் 18ஆம் தேதி சீமான் விசாரணைக்கு ஆஜராவதாகத் தெரிவித்து இருந்தார்.
இதனிடையில் வீரலட்சுமி சிமானை விமர்சித்த் வீடியோ ஒன்றை வெளியிட்டதைத் தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி வீரலட்சுமியின் நோக்கத்தை விமர்சித்தார். பின் செப்டம்பர் 16 ஆம் தேதி நள்ளிரவில் தனது வக்கிலுடன் சென்று சீமான் மீதான தனது புகாரைத் திரும்பப் பெற்றார்.
இந்தநிலையில் நடிகை விஜய்லட்சுமி சீமான் மீது இரண்டு முறை புகாரளித்தும் இரண்டு முறையும் சீமான ஆஜராகாத நிலையில் இந்த முறை இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண தானாக முன்வந்து விஜயல்ட்சுமி அளித்தப் புகாரின் பேரில் இன்று சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் ஆஜரானார். அப்போது காவல் நிலையத்தைச் சுற்றி கூடியிருந்த நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தள்ளுமுள்ளும் நடைபெற்றது. மேற்கொண்டு பிரச்சனைகளைத் தவிர்க்கக் காவல் நிலையத்தைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

