
ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நில மதிப்பு உயர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகப் பதிவு கட்டணத்தையும், முத்திரை கட்டணத்தையும் நான்கு முறை உயர்த்தி நிலங்களின் விலை 120 மடங்கு முதல் 150 வரை மடங்குவரை நிலங்களின் விலை உயர்ந்து இருப்பதாகப் பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையை அடுத்த நாவலூர் அருகே வருமானவரித் துறையினர் முடக்கிய பல கோடி ரூபாய் நிலத்தை ஜி ஸ்கொயர் நிறுவனம் வீட்டுமனை நிலங்களாகப் பிரித்து விற்பனை செய்து விட்டதாகச் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள செய்தியாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்காகப் பத்திரப்பதிவு துறையும், தமிழக முதலமைச்சரும் தொடர்ந்து சேவையாற்றி வருவதாகக் குற்றம் சாட்டினார். ஜி ஸ்கொயர் நிறுவனங்கள் விற்பனை செய்யப்படும் நிலங்களின் மதிப்பு உயர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, திமுக ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் நான்கு முறை பத்திரப்பதிவு கட்டணமும், முத்திரை கட்டணமும் உயர்த்தி இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
பத்திரப்பதிவு கட்டணம் நான்கு முறை உயர்ந்து இருப்பதன் மூலம், நிலங்களின் மதிப்பு 126 மடங்கு முதல் 120 மடங்குவரை உயர்ந்து விட்டதாகக் கட்டுமான நிறுவனங்களே குற்றம் சாட்டும் அளவுக்குத் தமிழக அரசு பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தி இருப்பதாகக் குற்றம் சாட்டினார். பத்திரப்பதிவு கட்டணம் உயரும்போதெல்லாம் மறைமுகமாக நிலங்களின் குறைந்தபட்ச மதிப்பும் உயர்ந்து விடுவதாகக் குற்றம் சாட்டிய பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர், இதன் மூலம் ஜி ஸ்கொயர் நிறுவனங்களின் நில மதிப்பு பலநூறு மடங்கு உயர்த்தி விற்பனை செய்யப்படுவதாகக் கூறினார்.
தமிழக அரசு மட்டுமல்லாமல், ஸ்கொயர் நிறுவன நிலங்களை வாங்க முன்வரும் வாடிக்கையாளர்களுக்கும் 90 விழுக்காடு வரை வங்கி கடன் தர முன்வருவதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் இதுவரை தமிழகத்தில் காலி மனைகளின் விலை 120 முதல் 150 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டதற்கு காரணமே பத்திரப்பதிவுத்துறை அமைச்சரும் தமிழக அமைச்சரும் தான் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஜி ஸ்கொயர் நிறுவனம்மூலம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்ட விரோத பண பரிமாற்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், அவர் குற்றம் சாட்டினார். சென்னை திருப்போரூரை அடுத்த நாவலூர் அருகே பல நூறு ஏக்கர் நிலத்தை அண்மையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் வாங்கியதாகவும், அந்த இடம் துபாயை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஈட்டியை நிறுவனத்துக்குச் சொந்தமான இடம் என்றும் சவுக்கு சங்கர் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டுகிறார்.
அரசு முறை பயணமாக வெளிநாடு செல்வதாகக் கூறி கடந்த ஆண்டு துபாய் சென்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ஈட்டியை நிறுவன உரிமையாளரைச் சந்தித்து பேசியதற்கும், தற்போது நாவலூர் அருகே பல நூறு ஏக்கர் ஈட்டியை நிறுவன சொத்துக்களை ஜி ஸ்கொயர் நிறுவனம் வாங்கி இருப்பதன் மூலம் தமிழக முதலமைச்சர் அரசு முறை பயணமாகச் செல்லவில்லையெனத் தெள்ளத்தெளிவா
கத் தெரிகிறது என்றும் அவர் கூறினார்.
துபாய் சென்று திரும்பியதன் மூலம் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்த்து உள்ளதாகத் தமிழக முதலமைச்சர் கூறி ஓராண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை ஒரு ரூபாய் கூடத் துபையிலிருந்து தமிழகத்திற்கு முதலீடு வராதது ஏன் என்றும் சவுக்கு சங்கர் கேள்வி எழுப்பினார்.
இப்படி கருப்பு பணமாகச் சம்பாதித்து வைத்திருக்கக்கூடிய பல நூறு கோடி ரூபாய் பணத்தை ஜி ஸ்கொயர் நிறுவனம்மூலம் வெள்ளை பணமாக மாற்றத் தமிழக முதலமைச்சரும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து செய்து வருவதாகவும், சட்டவிரோத பண பரிமாற்ற நடவடிக்கை எனவும் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து மத்திய அரசு உரிய கவனம் செலுத்தி தமிழக முதலமைச்சரின் மீது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்குப் பதிவு செய்து அவரை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஜி ஸ்கொயர் நிறுவனங்கள் விற்பனை செய்த நிலங்கள், இடங்களை வாங்கியவர்கள் யார் என்பது குறித்து உரிய விசாரணையை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


