சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில்பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரித்து நவீனப்படுத்தப்பட்டு உள்ளது என்று போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர்தெரிவித்தார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், விமானநிலைய காவல்-நண்பர் ரோந்து, திட்டம் தொடக்க விழா நடந்தது. தென் சென்னை போலீஸ் இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். சென்னை மாநகர தெற்கு கூடுதல் கமிஷனர் ஆனந்த் சின்ஹா, போக்குவரத்து இணை கமிஷனர் ம்கேஷ் குமார், பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விமான நிலைய ரோந்து வாகன திட்டத்தைச் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். பின்னர் போலீஸ் நண்பர் என்ற் அடையாள அட்டையைப் பயிற்சி முடித்த ரோந்து காவலர்களுக்கு வழங்கினார்.
பின்னர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களிடம் கூறிய்தாவது:-
சென்னை விமான நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகள், பொது மக்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்க காவல் நண்பர் ரோந்து என்ற திட்டத்தைத் தொடங்கி உள்ளோம். இதில் பய்ணிகளுக்கு எப்படி உதவிட வேண்டும் என்பதற்காகச் சிறப்புப் பயிற்சி தரப்பட்டு உள்ளது.
இந்தக் காவலர்களுக்கு மட்டும் போலீஸ் உடையில் கூடுதலாகக் கவச உடை அணிந்து இருப்பார்கள். சென்னை விமான நிலையத்தில் தினமும் 60 ஆயிரம் பயணிகளும் 15 ஆயிரம் ஊழியர்களும் வந்து செல்கின்றனர். இவர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் உதவிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. புகார் படிவங்கள் உள்ளன. பாதுகாப்பு மற்றும் சேவையில் ஏதாவது குறைபாடுகள் இருந்ததால் படிவங்கள் முலம் தெரிவிக்கலாம்.
சென்னையில் போதை தடுப்பு நடவடிக்கை சரியாக எடுக்கப்பட்டு வருகிறது. போதை ஒழிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுப்பட்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

