Sandalwood Festival: குதிரை வாகனத்தில் சந்தனக்கூடு ஊர்வலம்!

ஹஸ்ரத் சையத் குட்லஷா ரஹ்மத்துல்லாஹி அவுலியா தர்காவில் நாகூர் ஆண்டவர் பண்டிகையையொட்டி நடைபெற்ற சந்தனக்கூட விழாவில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை வழிபாடுசெய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை வக்கீல் தெருவில் அமைந்துள்ள ஹஸ்ரத் சையத் குட்லஷா ரஹ்மத்துல்லாஹி அவுலியா தர்கா.இங்கு  மத நல்லிணக்கத்தை போக்கும் வகையில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென ஆண்டுதோறும் நாகூர் ஆண்டவர் பண்டிகையை முன்னிட்டு 134-ஆம் ஆண்டுக் கொடி ஏற்றுதல் மற்றும் திருச்சந்தனக்கூட உருஸ் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் நாகூர் ஆண்டவர் பண்டிகையை முன்னிட்டு ஹஸ்ரத் அவுலியா தர்காவில் விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூட திருவிழா இன்று நள்ளிரவு 12 மணி அளவில் வீதியில் வாணவேடிக்கையுடன் பல்வேறு வாசனை மல்லிகை பூக்களாலும் ஜிகினா மலர்களாலும் ஜொலித்த சந்தனக்கூடத்தை குதிரை வாகனத்தில் வைத்து வீதிகளின் வழியாக ஊர்வலமாகப் புறப்பட்டுத் தர்காவை வந்தடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட சந்தனக்கூடத்தை இஸ்லாமியர்கள் தலையில் சுமந்தவாறு தர்காவின் முன்பாக மேளதாளங்கள் முழங்க அல்லா தொழுகை பாடல்களைப் பாடியபடி உள்ளே எடுத்துச் சென்று ஹஸ்ரத் சையத் குட்லஷா ரஹ்மத்துல்லாஹி அவுலியா சமாதியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு சந்தனம் பூசும் நிகழ்வு நடைபெற்றது.

பின்னர் தர்காவில் கூடியிருந்த இஸ்லாமிய பெண்கள் ஆண்கள் குழந்தைகள் என அனைவரும் சந்தனத்தை நெற்றியில்வைத்துவணங்கினர்.நடைபெற்றசந்தனக்கூடவிழாவில்உள்ளூர்மட்டுமின்றிவெளிமாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு விடிய விடியத் தூங்காமல் கண் விழித்து அல்லாவை வழிபட்டுச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *