sambar recipe:ராம்நாடு சாம்பார்.. அரைமணி நேரத்தில் செய்வது எப்படி?

Advertisements

சமையல் குறிப்பு :

நம்ம ஊரு ராம்நாடு சாம்பார் அரைமணி நேரத்தில் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்;
துவரம் பருப்பு – 1கப்
பாசிப்பருப்பு -1/2கப்
சின்ன வெங்காயம் -10
பெரியவெங்காயம்-1
தக்காளி – 3
கேரட்-2
பீன்ஸ் -5
முருங்கைக்காய் -1
கத்தரிக்காய் -3
மஞ்சள்த்தூள் -1/2தேக்கரண்டி
மிளகாய்த்தூள் -1தேக்கரண்டி
மல்லித்தூள் – 2தேக்கரண்டி
சாம்பார்ப்பொடி -2தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/2தேக்கரண்டி
கருவேப்பில்லை-2கொத்து
கடலை எண்ணெய்-1 1/2 தேக்கரண்டி
கடுகு -1தேக்கரண்டி
சீரகம் -1/2தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

நம்ம ஊரு ராம்நாடு சாம்பார் செய்முறை;

அகலமான பாத்திரத்தில் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, சேர்த்து 3கப் தண்ணீர் அல்லது பருப்பு முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வேக வைக்கவும், பின்னர் 20நிமிடம் கழித்து பெரியவெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், முருங்கைக்காய், கத்தரிக்காய், ஆகிய காய்கறிகளையும் பருப்புடன் சேர்த்து சிறிது நேரம் வேகவிடவும். பின்பு, மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிடவும்.

அனைத்து காய்கறிகளும், மசாலாக்களும் ஒன்றுடன் ஒன்றான பிறகு, சாம்பாரை தாளிக்க சிறிய தாளிப்பு சட்டியை அடுப்பில் வைத்து கடலைஎண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு போடவும், கடுகு வெடித்ததும் சீரகம் மற்றும் கருவேப்பில்லை போடவும், {கவனத்திற்கு கடுகு, சீரகம், கருவேப்பில்லை கருகிரக் கூடாது} இவைகளை சேர்ந்தபின் தோலுறித்து வைத்த சின்னவெங்காயத்தை சேர்க்கவும் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர், வெங்காயம் வதங்கியபிறகு சம்பார்ப்பொடியை சேர்த்து கடுகு, சீரகம், கருவேப்பில்லை, சின்னவெங்காயம் மற்றும் சம்பார்ப்பொடியுடன் ஒன்று சேர்ந்தவுடன், வேகவைத்த பருப்பு மற்றும் காய்கறிகளுடன் தாளிப்பை சேர்த்தால் மணக்க மணக்க நம்ம ஊரு ராம்நாடு சாம்பார் ரெடி…

இந்தச் சாம்பாருடன் அப்பளம் பொரித்து சாப்பிட்டு பாருங்கள், அடிபொழியாக இருக்கும்
உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்து விடும், சம்பாறை பார்த்து ஓடும் குழந்தைகள் கூட மறுபடியும் எப்போ சாம்பார் சமைப்பீங்கனு கேப்பாங்க, அப்படி இருக்கும் நம்ம ஊரு ராம்நாடு சாம்பார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *