Samantha Ruth Prabhu: சலிக்காத கிளாமர்!

ஹாலிவுட் நாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில்நடிகை சமந்தா, கண்ணாடி முன்பு நின்று எடுத்துக்கொண்டுள்ள விதவிதமான போட்டோஸ் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகை சமந்தா, சென்னையில் பிறந்து வளர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும்… விடாமுயற்சியோடு பட வாய்ப்புகளை தேடி, பல்வேறு கஷ்டத்திற்கு பின்னர் தெலுங்கு திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

நடிகை சமந்தா, சென்னையில் பிறந்து வளர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும்… விடாமுயற்சியோடு பட வாய்ப்புகளை தேடி, பல்வேறு கஷ்டத்திற்கு பின்னர் தெலுங்கு திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு வெர்ஷனின் ஹீரோயினாக நடிகை சமந்தா நடித்த நிலையில், ஹீரோவாக நாகசைதன்யா அறிமுகமானார்.

இருவருக்குமே இது முதல் படமாக அமைந்தது மட்டும் இன்றி… வெற்றிப்படமாகவும் மாறியது. மேலும் தமிழில், இருவரும் கிளைமேக்ஸ் காட்சியிலும் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் மூலம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு… ஒரு கட்டத்தில் காதலாக மாறிய நிலையில், இருவரும் ரகசியமாக டேட் செய்து வந்தனர்.

பின்னர் வெளிப்படையாக காதலை அறிவித்த இருவரும், கடந்த 2017-ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம், கோவாவில் மிக பிரமாண்டமாக நடந்தது.

திருமணம் ஆகி சில வருடங்கள் மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில், 2022 -ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிவதாக கூறி அதிர்ச்சி கொடுத்தனர். இவர்களின் பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்ட போதிலும்… தற்போது வரை இருவரும் வெளிப்படையாக தங்களின் பிரச்சனை குறித்து பேசிக்கொள்ளவில்லை.

நாகசைதன்யாவை பிரிந்த பின்னர் மீண்டும் திரையுலகில் சமந்தா கவனம் செலுத்த துவங்கிய நிலையில், மயோசிட்டிஸ் பிரச்சனையால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

இந்த அரியவகை நோய் காரணமாக எழுந்து கூட நிற்க முடியாமல் சமந்தா கஷ்டப்பட்ட நிலையில்… சிகிச்சைக்கு பின்னர் மீண்டும், திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். தற்போது சமந்தா தென்னிந்திய திரையுலகை தாண்டி, பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.  ஒரு பக்கம் படங்களில் பிசியாக இருந்தாலும், மற்றொரு புறம்… போட்டோ ஷூட் செய்து ரசிகர்களை கவர்த்திழுப்பதிலும் பிசியாக இருக்கும் சமந்தா… ஹாலிவுட் நாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில், கண்ணாடி முன்பு நின்று எடுத்துக்கொண்டுள்ள விதவிதமான போட்டோஸ் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *