Cricket World Cup: பாகிஸ்தான் போராடி வெற்றி!

Advertisements

பாகிஸ்தான் போராடி வெற்றி!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 8ஆவது லீக் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, இலங்கை அணியில் பதும் நிசாங்கா மற்றும் குசால் பெரேரா இருவரும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். இதில், பெரேரா ரன் ஏதும் எடுக்காமல் ஹசன் அலி பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து குசால் மெண்டிஸ் களமிறங்கினார்.’

மெண்டிஸ் மற்றும் நிசாங்கா இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இந்த ஜோடி 2ஆவது விக்கெட்டிற்கு 102 ரன்கள் சேர்த்தது. நிசாங்கா 61 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து சதீர சமரவிக்ரமா களமிறங்கினார். ஒரு புறம் அதிரடியாக விளையாடி வந்த குசால் மெண்டிஸ் சிக்ஸர் அடித்து உலகக் கோப்பையில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.

அதுமட்டுமின்றி இலங்கை அணிக்காக அதிவேகமாகச் சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். மெண்டிஸ் 65 பந்துகளில் சதம் அடித்துச் சாதனை படைத்தார்.கடைசியாக இலங்கை அணி 50 ஒவரில்  9 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்களை எடுத்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். கடைசியாகப் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 345  ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *