நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்திக் காரைக்காலில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்மையில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் எனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கைவிட்டு பழைய முறையான வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில அரசியல் குழு துணைச்செயலாளர் பொன்.செந்தமிழ்செல்வன் தலைமையில் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் மாநில அரசியல் குழுச் செயலாளர் அரசு.வணங்காமுடி கருத்துரை ஆற்றினார்.
மத்திய அரசைக் கண்டித்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கைவிடக் கோரியும், வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தியும் கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தொகுதி செயலாளர்கள் தமிழரசி, விடுதலைகனல், வல்லவன், கலைவாணன், செல்வம் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கலந்து கொண்டு கன்னடம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

