Ku. Ka. Selvam: முன்னாள் MLA காலமானார்!

தீவிர உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கு.க. செல்வம் காலமானார்.

சென்னை; சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் உடல்நலக்குறைவால் காலமானார். திமுக தலைமை நிலைய செயலாளரான கு.க.செல்வம் போரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

திமுகவின் தலைமை நிலைய செயலாளரும், 2016ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் உறுப்பினராகவும் கு.க. செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 முதல் 2021 வரை திமுகவின் சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வந்தார்.

பாஜகவில் மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார். இருப்பினும், பாஜகவில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. இதனையடுத்து கு.க.செல்வம் மீண்டும் 2022ஆம் ல் திமுகவுக்கு திரும்பினார். நேரடி அரசியலில் இருந்து சில ஆண்டுகாலமாக ஒதுங்கியிருந்தார் கு. க. செல்வம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகக் கு.க. செல்வம் தீவிர உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பிலிருந்து வந்துள்ளார். இதையடுத்து கு.க. செல்வம் இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *