
வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகும் முதல் கட்ட நூறு வேட்பாளர்கள் பட்டியலை நாம் தமிழர் சீமான் அறிவித்துள்ளார் அந்த பட்டியலில் சாட்டை துரை முருகன் பெயர் இடம் பெறவில்லை. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியில் மீண்டும் கலகம் வெடித்திருக்கிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் தமிழர் கட்சியில் தீவிரமாக பணியாற்றி வருபவர் சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞரணி செயலாளர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்து வந்த சாட்டை துறைமுருகன் தற்போது அந்த கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
சமீப காலமாக சாட்டை துரைமுருகனுக்கும் நாம் தமிழர் சீமானுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.வருகிற சட்டமன்றத் தேர்தலில் சாட்டை துரைமுருகனுக்கு வாய்ப்பு தரப்பட மாட்டாது என ஏற்கனவே ஜெம் தொலைக்காட்சி சிறப்பு செய்தி தொகுப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாம் தமிழர் சீமான் நேற்று வெளியிட்ட முதல் கட்ட நூறு வேட்பாளர் பட்டியலில் சாட்டை துரைமுருகன் பெயர் இடம் பெறவில்லை
அதேசமயம் ஜெம் தொலைக்காட்சி குறிப்பிட்டு இருந்த இடும்பாவனம் கார்த்திக் சினிமா இயக்குனர் களஞ்சியம் ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.இது தொடர்பான பின்னணி தகவல்களை மேலும் இப்போது விரிவாக பார்க்கலாம்
கடந்த சில காலங்களுக்கு முன்பாக நாம் தமிழர் கட்சியிலிருந்து ஏராளமான முக்கிய நிர்வாகிகள் அதிருப்தி காரணமாக கட்சியை விட்டு விலகி வந்தார்கள்.அந்த வகையில் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் ஆறுமுகம் சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் முகமது அலி ஜின்னா ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் வினோத்குமார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் மகேந்திரன் ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட செயலாளர் உள்பட ஏராளமான பேர் சீமான் மீது அதிருப்தி ஏற்பட்டதாக கூறி கட்சியை விட்டு விலகினார்கள்.
கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுவதும் 2000 பேர் கட்சியை விட்டு விலகியதாக சொல்லப்பட்டது.இதே காலகட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் ஒருங்கிணைப்பு பாசறை தலைவியான காளியம்மாளும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் இதற்கிடையே நடிகை விஜயலட்சுமி சீமான் மீது அடுக்கடுக்கான வீடியோக்களை வெளியிட்டு மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் தற்போது சாட்டை துரைமுருகனும் கட்சியை விட்டு நீக்கப்படலாம் அல்லது அவர் பதவி விலகலாம் என்று சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியில் இரண்டாம் கட்ட பேச்சாளராக பணி வருகிறார் காளியம்மாள் போலவே இவரது பேச்சை கேட்பதற்கும் இணையதளத்தில் லட்சக்கணக்கான பேர் காத்திருக்கிறார்கள் இவர் சொந்தமாக நடத்தி வரும் யூடியூப் சேனலில் 70 லட்சம் பேர் பார்வையாளர்களாக இருக்கிறார்கள்.
வார்த்தைக்கு வார்த்தை சீமானை அண்ணன் அண்ணன் என்று அழைக்கும் சாட்டைக்கும் சீமானுக்கும் இடையே தற்போது ஏற்பட்டிருக்கும் மோதல் நாம் தமிழர் கட்சியில் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது இந்த நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் வழக்கம் போல 117 பெண்களுக்கும் 117 ஆண்களுக்கும் வாய்ப்புகள் தரப்படும் என நாம் தமிழர் சீமான் சொல்லி வந்தார்.தற்பொழுது முதல் கட்டமாக 100 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டிருக்கிறார்.
இதில் இடும்பாவனம் கார்த்திக் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடுவதாகவும் சினிமா இயக்குனர் களஞ்சியம் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவதாகவும் வீரப்பனின் மகள் வித்யா ராணி மேட்டூர் தொகுதியில் போட்டியிடுவதாகவும் முக்கிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.நாம் தமிழர் சீமானை பொறுத்தவரையில் காரைக்குடி தொகுதியில் போட்டியிடலாம் என தெரிகிறது .
காரைக்குடி தான் நாம் தமிழர் சீமானுக்கு சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கதுஆனால் இது பற்றிய அறிவிப்பை அவர் வெளியிடவில்லை இந்த நிலையில் சாட்டை துரைமுருகன் கடந்த தேர்தலில் போட்டியிட்ட வகையில் இந்த தேர்தலில் அவருக்கு தொகுதி ஒதுக்கி தரப்படவில்லை இது குறித்து சில நிர்வாகிகள் கூறும் பொழுது சாட்டை துரைமுருகன் தான் நான் அண்ணன் நிற்கும் தொகுதியில் களப்பணி ஆற்றப் போகிறேன் என்று தெரிவித்தார்.ஆனால் அவர் தொகுதி கேட்டு விண்ணப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது
ஆனால் சமீபகாலமாக சாட்டை துறைமுருகனின் பேச்சு கட்சிக்கு எதிராக இருப்பதாக கூறி நாம் தமிழர் சீமான் அவர் மீது கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.இதன் நிமித்தமாகத்தான் அவருக்கு வருகிற சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என தெரிகிறது.
இதற்கிடையே சாட்டை முருகன் நல்ல பேச்சாளர் கட்சிக்காக நீண்ட காலம் உழைத்திருக்கிறார் அவருக்கே சீட் தரவில்லை என்றால் சாதாரண பட்ட தொண்டர்களுக்கு கட்சியில் என்ன மரியாதை இருக்கிறது கண்டிப்பாக சாட்டை துறை முருகனுக்கு தொகுதி ஒதுக்கி தரப்பட வேண்டும் என்ற குரல் நாம் தமிழர் கட்சியில் வலுத்திருக்கிறது.தற்பொழுது இது குறித்து சீமான் சமாதான நிலைக்கு வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது இருந்த போதிலும் சாட்டை துரைமுருகன் விஷயத்தில் நாம் தமிழர் சீமான் என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்




