
இரு தினங்களாக சற்றே குறைந்து வந்த ஆபரணத் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து, சவரன் விலை ரூ.96,000-ஐ தாண்டியிருப்பது நகை வாங்க விழைவோருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.20 குறைந்து ரூ.12,000 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.160 குறைந்து ரூ.96,000 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.22 குறைந்து ரூ.13,091 ஆகவும், சவரன் விலை ரூ.176 குறைந்து ரூ.1,04,728 ஆகவும் விற்பனை ஆனது.
தங்கம் விலை இன்று ரூ.320 உயர்ந்துள்ளது. தற்போது கிராம் விலை மீண்டும் ரூ.12,000-ஐ தாண்டியும், சவரன் விலை 96,000-ஐ தாண்டியும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலையும் வெகுவாக உயர்ந்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.




