
Actress Kajal Agarwal : திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாகத் திரைப்படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை காஜல் அகர்வால் தற்பொழுது கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன் படத்தின் மூன்றாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார்.
மும்பையில் பிறந்த பிரபல நடிகை காஜல் அகர்வால் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தைத் தொடங்கினார். தொடர்ச்சியாகத் தெலுங்கு திரையுலகிலும் பல திரைப்படங்களில் அவர் நடித்தார்.
இந்தச் சூழலில் கடந்த 2008 ஆம் ஆண்டு பிரபல நடிகர் பரத் நடிப்பில் வெளியான பழனி என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கினார் நடிகை காஜல் அகர்வால்.
தளபதி விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாகத் தமிழில் நடித்து அசத்திய காஜல் அகர்வால், இறுதியாகத் தமிழில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான கருங்காப்பியம் என்கின்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.
விரைவில் வெளியாகவுள்ள கமலின் இந்தியன் 2 திரைப்படத்தில் காஜல் அகர்வால் நடித்திருக்கிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குனர் சங்கர் அளித்த தகவலின்படி இந்தியன் படத்தின் மூன்றாம் பாகத்தில் தான் காஜல் அகர்வாலின் காட்சிகள் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.




