Dubai COP28: துபாயில் பிரதமர் மோடி!

வரலாற்று சிறப்புமிக்க பருவநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அடுத்து துபாய் சென்றுள்ளார் பிரதமர் மோடி!

துபாயில் எக்ஸ்போ நகர வளாகத்தில் காப்-28 உலக பருவநிலை உச்சி மாநாடு நேற்று கோலாகலமாக தொடங்கியது. அடுத்த இரண்டு வாரங்களில் இறுதி காலநிலை ஒப்பந்தம் மற்றும்  புதைபடிவ எரிபொருள்கள் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம் வலியுறுத்தியது.

இதையடுத்து உலக அளவில் பருவநிலை மாறுபாடுகளை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளைக் காண்பதற்கான  தீர்வுகள் பற்றி ஆலோசிக்க ஆண்டுதோறும் ஐ.நா.வின் சார்பில் உச்சி மாநாடு உறுப்பு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று துபாய் எக்ஸ்போ நகர வளாகத்தில் காப்-28 உலக பருவநிலை உச்சி மாநாடு கோலாகலமாக தொடங்கியது.

இந்த மாநாட்டை அமீரக மந்திரியும், காப்-28 மாநாட்டின் தலைவருமான டாக்டர் சுல்தான் ஜாபர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஐ.நா உச்சி மாநாட்டுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  உச்சி மாநாட்டில் இந்திய அரங்கை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாட்டுத்துறை மந்திரி பூபேந்தர் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

இந்த இந்திய அரங்கு திறப்பு விழாவில் மத்திய மந்திரியுடன் அமீரகத்துக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் துபாயில் தரையிறங்கிய பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், “”காப்-28 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக துபாயில் தரையிறங்கியுள்ளேன். சிறந்த கிரகத்தை உருவாக்கும் நோக்கில் நடைபெறும் உச்சிமாநாட்டின் நடவடிக்கைகளை எதிர்நோக்குகிறோம்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.

“துபாயில் உள்ள இந்தியர்கள்  என்னை அன்பான வரவேற்றனர்.  அவர்களின் ஆதரவும் உற்சாகமும் நமது துடிப்பான கலாச்சாரம் மற்றும் வலுவான பிணைப்புகளுக்கு ஒரு சான்றாகும்” நான் மிகவும் ஆழ்ந்து நெகிழ்ந்தேன். என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி உச்சி மாநாட்டில் பங்கு கொள்ள இன்று காலை 11.00 மணியளவில் வருகை புரிந்தார். அப்போது துபாய் வாழ் இந்தியர்கள் மோடிஜி என கோஷம் எழுப்பி தங்களது அன்பை வெளிப்படுத்தினர். இந்தியர்கள் அன்பான வரவேற்பில் நெகிழ்ந்து கையசைத்து தனது அன்பினை வெளிப்படுத்தினார்.

இந்த  COP28  ஐ.நா. உலக பருவநிலை உச்சி மாநாடு  டிசம்பர்  12-ஆம் தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *