Manisha Yadav: லிப் லாக் காட்சியில் நடிக்க மறுப்பு!

நடிகை மனிஷா யாதவ் லிப் லாக் காட்சியில் நடிக்க மறுப்பு!

சென்னை: ‘வழக்கு எண் 18/9’ திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானார் நடிகை மனிஷா யாதவ். ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘திரிஷா இல்லனா நயன்தாரா’, ‘ஒரு குப்பை கதை’, ‘பொட்டு’, ‘சண்டி முனி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, நினைவெல்லாம் நீயடா என்ற படத்தில் பிரஜினுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தை ஆதிராஜன் இயக்கியுள்ளார். இதற்கு முன் ‘சிலந்தி’, ‘அருவா சண்ட’ உள்ளிட்ட படங்களை ஆதிராஜன் இயக்கியுள்ளார். இந்நிலையில் ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தில் பிரஜினுக்கு, லிப் லாக் கொடுக்க மனிஷா மறுத்துள்ளார்.

மேலும், பாடல் காட்சி ஒன்றிலும் பிடிவாதமாக மறுப்பு தெரிவித்து கன்னத்தில் மட்டுமே முத்தமிட்டு நடித்துள்ளார்.

இதனால், ஆதிராஜனுக்கும், மனிஷாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சில மணி நேரம் படப்பிடிப்பு தடைபட்டது. பிறகு தொடர்ந்து மனிஷா நடித்திருக்கிறார். ஆனால் கடைசி வரை அவர் லிப் லாக் காட்சியில் நடிக்கவில்லையெனப் படக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *