Royal Enfield Bullet 350: இனி லட்சக்கணக்கில் காசு கொடுத்து வாங்க வேண்டாம்!

Advertisements

வாடகைக்கு வந்தாச்சு ராயல் என்பீல்டு! இனி லட்சக்கணக்கில் காசு கொடுத்து வாங்க வேண்டாம்…!

பைக் பிரியர்களுக்கு ஒரு முறையாவது ராயல் என்பீல்டு வண்டியை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். நூறு ஆண்டுகளாக இருசக்கர வாகனத்தில் சிம்ம சொப்பனமாக இருக்கும் ராயல் என்ஃபீல்டு வண்டியை வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாகக் கூட இருந்துள்ளது. ஆனால், ரூ. 2 லட்சம் கொடுத்து எல்லோராலும் ராயல் என்ஃபீல்டு வண்டியை வாங்க முடியாத சூழலும் உள்ளது.

அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம்வரை பண்ணையார்கள், காவல்துறை அதிகாரிகள், ராணுவ வீரர்கள், பைக் ரேசர்கள் மட்டுமே ஓட்டி வந்த புல்லட் இனி பாரம மக்களும் பயன்படுத்த முடியும். அதாவது, ராயல் என்பீல்டு லவ்வர்களுக்கு எனப் புதிய திட்டத்தைப் புல்லட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இனிமே புல்லட்டில் செல்ல வேண்டும் என ஆசைப்பட்டால் அதை விலை கொடுத்து வாங்க தேவையில்லை. ராயல் என்ஃபீல்டு வண்டியை வாடகைக்கு எடுத்து ஓட்டலாமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ராயல் என்பீல்டு வண்டியை வாடகைக்கு விடும் புதிய திட்டத்தை ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிவிப்பு புல்லட் பிரியர்களைக் குஷியாகி உள்ளனர் என்றே கூறலாம்.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்பட்ட ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்றவாறு என்ஃபீல்டு புல்லட்டுகளின் புதிய அப்டேட்களும், மாடல்களும் அறிமுகமாகி வருகின்றன. அதற்கு ஏற்றார் போல் விலையும் அதிகமாகவே தான் உள்ளது. இந்த நிலையில் அனைவரைக்கும் புல்லட் ஓட்டும் அனுபவம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியாவில் 26 நகரங்களில் ராயல் என்ஃபீல்டு வாகனங்களை வாடகைக்கு விடும் திட்டம் அறிமுகமாகியுள்ளது.

முதற்கட்டமாக டெல்லி, கோவா, சிம்லா, கொச்சின், சண்டிகர், விசாகப்பட்டினம், அகமதாபாத், மும்பை, மகாராஷ்டிரா, குஜராத், லே, மனாலி, தர்மசாலா, ஹரித்வார், ரிஷிகேஷ், உதய்ப்பூர், ஜெய்ப்பூ, புவனேஷ்வர், திருவனந்தபுரம், பெங்களூரு, ஐதரபாத், டெராடூ, சென்னை உள்ளிட்ட நகரங்களில் ராயல் என்பீல்டை வாடகைக்கு எடுத்து ஓட்டலாம்.

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் ராயல் என்ஃபீல்டு வண்டியை வாடகைக்கு எடுத்து ஓட்டலாம் என்றும், வாடகைக்கு எடுக்கும் வாகனத்தின் மாடல், ஓட்டுநரின் வயது, வாடகை விவரங்களைக் கொடுத்துப் பைக்கை வாடகைக்கு எடுக்கலாமெனக் கூறப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டின் இந்த முயற்சிக்காக 40க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் வாடகை ஆப்பிரேட்டர்கள் இணைந்துள்ளன. ரெண்டல் வீல், வைல்ட் அட்வென்ச்சர், பாலாஜி டூர்ஸ், குமோ பைக் உள்ளிட்ட வாடகை ஆபரேட்டர்கள் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

அண்மையில் ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. மிலிட்டரி ரெட் மற்றும் பிளாக், மெரூன் மற்றும் பிளாக், பிளாக் கோல்டு கலர்களில் புல்லட் 350 அறிமுகமாகியுள்ளது. மிலிட்டரி கோட்டாவில் ரூ.1.73 லட்சம் என்றும், சாதாரண மாடலுக்கு ரூ.1.97 லட்சம் என்றும், டாப் டயர் பிளாக் கோல்டு வேரியண்ட் மாடலுக்கு ரூ.2.16 லட்சம் என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *